வண்டலூர் உயிரியல் பூங்கா உட்கட்டமைப்பு வசதிகளுடன் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்படும் – தமிழக முதலமைச்சர்

0
42

வண்டலூர் உயிரியல் பூங்கா உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சர்வதேச அளவுக்கு வண்டலூர்  பூங்கா:

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவையில் பதிலுரையாற்றினார். அப்போது தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 582 கோடி ரூபாய் செலவில், ஏரிகள், குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட 34 ஆயிரத்து 871 நீர் அமைப்புகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் நீர் மேலாண்மை மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், நீர் நிலைகள் தூர்வாரப்பட்டதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 15 முதல் 20 நாட்களுக்குள் கடைமடை பகுதி வரை சென்றடைந்து, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் முதல் நகரமாக சென்னை உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டம் மூலம் பருவமழை பொய்த்தாலும் சென்னை வாசிகளுக்கு குடிநீர் கிடைக்கும் என்றார்.

11 மாவட்டங்களில் 407 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். திருவொற்றியூர், தரங்கம்பாடி மற்றும் கடலூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய அரசுடன் 420 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here