மெக்சிகோவின் நெருப்புப் பிழம்பையும், புகையையும் கக்கும் எரிமலை

0
274

மெக்சிகோவின் 2-வது மிகப்பெரியதும், வட அமெரிக்காவின் 5-வது மிக உயரமுடையதுமான பொப்போக்காடெபெட்டல் என்ற எரிமலை தற்போது நெருப்புப் பிழம்பையும், புகையையும் கக்கி வருகிறது.

நெருப்புப் பிழம்பையும், புகையையும் கக்கும் எரிமலை:

மெக்சிகோவின் பொப்போக்காடெபெட்டல் (Popocatepetl) என்கிற எரிமலை நெருப்புப் பிழம்பையும், புகையையும் கக்கி வருகிறது.

மெக்சிகோவின் 2-வது மிகப்பெரியதும், வட அமெரிக்காவின் 5-வது மிக உயரமுடையதுமான இந்த எரிமலை 17 ஆயிரத்து 802 அடி உயரம் கொண்டதாகும். அது நேற்று அதிகாலை முதல் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. சுமார் 6 ஆயிரத்து 562 அடி உயரத்துக்கு புகையை கக்கி வரும் எரிமலை, அதிகாலை வேளையில் நெருப்புப் பிழம்பைக் கக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகளில் முக்கியமான ஒன்றாக இந்த எரிமலை பார்க்கப்படுகிறது. நெருப்புப் பிழம்புடன் பாறைத்துண்டுகளையும் கக்கி வரும் நிலையில், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுகிறது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here