அமெரிக்கத் தொழிலாளர்களால் கிடைத்த தினம் இன்று!

0
119

உழைக்கும் கரங்களே உருவாக்கும் கரங்களே என்று அல்லும் பகலும் ஓயாமல் உழைக்கும் உழைப்பாளர்களுக்கான பொன்னாள் இன்று. தொழிலாளர்களைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் இனிய நாள் இது.

பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் பதினெட்டு முதல் இருபது மணி நேரம் வேலை செய்தனர். வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்கக் கூறி அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் போராடிய நாள் மே 1 ஆகும். போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தொழிலாளர்கள் பலர் இதில் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவு கூறும் நாளாம் இந்த மே தினம்.

காலை முதல் மாலை வரை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தன் குடும்பத்திற்காக அயராது பாடுபடும் தொழிலாளர்களைப் போற்ற வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பிழைப்புக்காகக் குடும்பத்தைப் பிரிந்து பிழைப்புத் தேடி அயராது உழைக்கின்றனர். சிலர் இரவுப்பணியில் வேலை செய்கின்றனர். மழையிலும் வெயிலிலும் இரவுபகல் பாராது வேலை செய்ய அவர்களால் மட்டுமே முடியும். அவர்களால் மட்டுமே நம் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.

எத்தனைத் துறைகளடா அதில்தான் எத்தனை தொழிலாளர்களடா
அவர்கள் நினைத்தால் மலையையும் மடுவாக்க முடியும். எதையும் சிறப்பாகச் செய்யும் வல்லமை அவர்களுக்கு உண்டு.துப்பரவுப் பணியாளர்கள் மருத்துவப் பணியாளர்கள் காவல்துறைப் பணியாளர்கள் போன்றவர்கள் பேரிடர் காலங்களிலும் நாட்டின் நலனுக்காகப் பாடுபடுகிறார்கள். அவர்கள் அனைவரையும் போற்றும் திருநாள் இது.

தொழிலாளர்கள் நினைத்தால் அவர்களால் எதையும் சாதிக்க முடியும். உழைப்பாளர்களைப் போற்றும் விதமாக உழைப்பாளர் சிலை உள்ளது. உழைக்கும் மக்களைப் போற்றுவோம் அவர்களுக்கு இந்த இனிய நாளில் நன்றிக் கலந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

-எழுத்தாளர் உமா

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here