உலக ஐஸ் கிராஸ் பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்கா வீரருக்கு சாம்பியன் பட்டம்

0
32

உலக சாம்பியன் ஐஸ் கிராஸ் பனிச்சறுக்கு போட்டியில்  பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அமெரிக்காவின் கேமரன் நாஸ் (Cameron Naasz), சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

உவர்நெட் போர்ஸ் (Uvernet-Fours) என்ற மலைப்பகுதியில், 2000 மீட்டர் உயரத்தில் முதல்முறையாக இந்தப் போட்டி நடைபெற்றது. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், ஆடவர் பிரிவில், அமெரிக்காவின் கேமரன் நாஸ் முதலிடம் பிடித்தார்.

ஆஸ்திரேலிய வீரர் 2ம் இடத்தையும், சுவிட்ஸர்லாந்து வீரர் 3ம் இடத்தையும் பிடித்தனர். மகளிர் பிரிவில் கனடாவின் ஜாக்குலின் லெகெரே (Jacqueline Legere) சாம்பியன் பட்டம் வென்றார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here