முதல் முறையாக இந்தியாவிற்கு வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

0
216

முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், அடுத்த மாதம் மத்தியிலோ, அல்லது இறுதியிலோ இந்தியா வர இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அவரது இந்திய வருகைக்கான தேதி குறித்து, இருநாடுகளின் அதிகாரிகள், ஆலோசனை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. கடந்தாண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், தொடர் நிகழ்ச்சிகளால், அமெரிக்க அதிபரால் பங்கேற்க இயலவில்லை என வெள்ளை மாளிகை, பின்னர் கூறியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்க கோரும் தீர்மானம், விரைவில், செனட் சபையில் தாக்கலாகி, வாக்கெடுப்புக்கு வர உள்ள நிலையில், அவரது இந்திய பயணம் குறித்த திட்டமிடல் பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.

தாம் அதிபராக பதவியேற்று டிரம்ப் ஒருமுறை கூட இந்தியா வரவில்லை என்கிற நிலையில் தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here