அமெரிக்காவில் உலகத்தை ஆச்சரியப்பட வைத்த ஸ்பெல்லிங் போட்டி(US SCRIPPS NATIONAL SPELLING BEE )

0
409

அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்பெல்லிங் போட்டியில், உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி முன் எப்போதும் நடைபெறாத வண்ணம், 8 மாணவர்கள் கோப்பையை வென்றுள்ளனர்.

US SCRIPPS NATIONAL SPELLING BEE என்கிற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு ஸ்பெல்லிங் போட்டி நடப்பது வழக்கம். 92 வது முறையாக இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின் வெற்றியாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். உலகில் உள்ள சுமார் 11 மில்லியன் குழந்தைகள் இப்போட்டியில் பங்கேற்பதற்காக தங்களது பள்ளிகளில் நடைபெறும் தகுதிச்சுற்றுகளில் பங்கேற்றுள்ளனர். அதிலிருந்து 562 பேர் இப்போட்டியின் பிரதான சுற்றுக்களில் பங்கேற்க தகுதிபெற்றனர்.  மே 26 ம் தேதி தொடங்கிய இப்போட்டி நேற்று முடிவுற்றது. நேற்று மேரிலாண்டு மாகாணத்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் 16 மாணவர்கள் பங்கேற்றனர். விறுவிறுப்பாக சென்ற 20 சுற்றுக்களுக்கு பிறகு, 8 போட்டியாளர்களை வெற்றியாளர்களாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர்.

ஒவ்வொரு வருடம் நடைபெறும் இப்போட்டிகளில் இதுபோன்றோரு கடுமையான போட்டியை பார்த்ததில்லை என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். எளிதாக வெற்றியாளரை தீர்மானித்து வந்த இப்போட்டியில் இந்த வருடம், இறுதியில் இருந்த 8 போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்ததில்லை என தங்களது திறமையை உலகறிய செய்தனர். நிகழ்ச்சியை நடத்தியவர்கள் கையில் சவாலான வார்த்தைகளின்றி போகவே, வேறு வழியின்றி 8 போட்டியாளர்களை வெற்றியாளர்களாக அறிவித்துவிட்டனர்.

ஒவ்வொரு வெற்றியாளருக்கும் 50,000 டாலர் பரிசுத்தொகையாகவும்,1,200 டாலர் வைப்பு நீதியாகவும் வழங்கப்படுகிறது. இப்போட்டிகளில் அமெரிக்கா வாழ் இந்திய மாணவர்களே கடந்த 15 வருடங்களாக வெற்றிவாகை சூட்டியுள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு வெற்றிபெற்ற 8 போட்டியாளர்களின் 6 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here