அமெரிக்காவிற்கு எச்சரிகை – ஈரான் அதிபர் ஹசன் ருஹானி

0
285

ஈரான் மற்றும் அமெரிக்கா இடைய கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என்று ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, மத்திய கிழக்குப் பகுதியில் போர் கப்பல், போர் விமானம் மற்றும் ராணுவ தளவாடங்களைக் குவித்து வருகிறது. ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு இன்றளவும் நீடித்து வருகிறது.

பொருளாதாரத் தடைகளால் உருவாகி இருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஈரான் நிலையான வளர்ச்சியை நோக்கியே என்றும் பயணிக்கிறது என்றும்,
அமெரிக்காவின் எவ்வித அழுத்தங்களுக்கும் ஈரான் ஒருபோதும் அடிபணியாது” எனவும் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here