தமிழக கலாச்சாரத்தை உலகளவில் இசை மூலம் கொண்டு செல்வது நாம் கடமை – ஏ.ஆர்.ரகுமான்

0
49

புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் செய்தியாளர் சந்திப்பில்,  தமிழக கலாச்சாரத்தை உலகளவில் இசை மூலம் கொண்டு செல்ல தa பியூச்சர்ஸ் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான இவர், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற  திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்க்கு  இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரகுமான். மேலும் இவர்,  இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.

இவர் இசைதுறையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு, ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றார்.

ஏ.ஆர்.ரகுமான்  தனது 53வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஐயர்கண்டிகை கிராமத்தில் உள்ள தனது ஸ்டுடியோவில் ஏ.ஆர்.ரகுமான் தமது புதிய திட்டத்தை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழக கலாச்சாரம், சென்னை கலாச்சாரம் உள்ளிட்டவற்றை இளைய தலைமுறைக்கு இசை மூலம் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here