அமெரிக்காவில் புற்றுநோயுடன் போராடி மீண்ட 6 வயது சிறுவனுக்கு சக மாணவர்கள் அளித்த வரவேற்பு

0
34

அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் புற்றுநோயுடன் போராடி மீண்ட 6 வயது சிறுவனுக்கு பள்ளியில் சக மாணவர்கள் அளித்த உற்சாக வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூபரி நகரைச் சேர்ந்த ஜான் ஆலிவர், 3 வயதாக இருக்கும் போது  லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (lymphoblastic leukemia) என்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அவனது பெற்றோர் கண்டறிந்தனர்.

இதனால் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் கடந்த 3 ஆண்டுகளாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகளை சிறுவன் பெற்று வந்தான்.

கடந்த டிசம்பர் மாதத்துடன் கீமோதெரபி சிகிச்சை முடிந்த நிலையில் நோயில் இருந்து முற்றிலும் விடப்பட்டு ஜான் ஆலிவர் பள்ளிக்கு திரும்பினான். அப்போது பள்ளி நுழைவாயிலில் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்று சக மாணவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here