வனவிலங்கு வேட்டையாடுதலை தடுக்க ”வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அவசியம்”

0
74

வனவிலங்கு வேட்டை, கடத்தல் உள்ளிட்ட இயற்கைக்கு நேரிடும் துன்பங்கள், பேராபத்திற்கான அழிவுப்பாதை என இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.  மேலும், வனத்தை உருவாக்கும் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் போக்கு, எத்தனை எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், குறைந்தபாடில்லை. இதனால் வனவிலங்கு  வேட்டையாடுதலை தடுக்க ”வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அவசியம்” வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிவியல் கொள்கை தளம்:

அரசுகளுக்கிடையேயான “பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கான, அறிவியல் கொள்கை தளம்” என்ற அமைப்பு, இயற்கைக்கு நேரிடும் ஆபத்துகள் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, எதிர்பாராத அளவிற்கு, வனங்கள் அழிக்கப்படுவதுடன், வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு, இயற்கையின் பேரழிவிற்கு வித்திடப்படுவதாக அந்த அமைப்பு கூறியிருக்கிறது.

யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்களின் வேட்டை, முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உலகளவில், 10 லட்சம் வன விலங்குகள், பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக, கூறப்பட்டுள்ளது. இயற்கையை காக்கும் அதேவேளையில், வனவிலங்குகளை காத்து பாதுகாப்பதும் மிகவும் அவசர அவசியமான ஒன்றாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here