லண்டனில் நடைபெற்ற் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், சிறிதும் பதற்றமின்றி புத்தம் படிக்கும் சிறுவன்!

0
274

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டன் நகரில் நடைபெற்றது. இந்த டென்னிஸ் தொடரில் பெடரரும், நடாலும் மோதிய அரை இறுதிப் போட்டியின் போது, மைதானத்தில் அமர்ந்து இருந்த சிறுவன் ஒருவன், ஆட்டத்தை ரசிக்காமல், சிறிதும் பதற்றமின்றி புத்தகம் படிக்கும் காட்சிகள் வியப்பை ஏற்படுத்தி உள்ளது அனைவருக்கும்.

பதற்றமின்றி புத்தம் படிக்கும் சிறுவன்!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று விறுவிறுப்பு குறையாமல் நடந்த டென்னிஸ் போட்டியில்,  உலகின் ஜாம்பவான்களான ரபேல் நடாலும், ரோஜர் பெடரரும் விம்பிள்டன் அரை இறுதியில் மோதினர்.  இந்த போட்டியில் பெடரர் வெற்றி பெற்றார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் மிகச் சிறந்த ஆட்டமாக வர்ணிக்கப்படும். இப்போட்டியின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்க, சிறுவன் ஒருவனோ, எந்த பதற்றமும் இல்லாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.

இந்தக் காட்சியானது,  தற்போது இணையதளத்தில் வெளியாகி பல தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here